ஏவல் என்றால் என்ன...

 


ஏவல் என்றால் என்ன........

பல இடங்களில் பலரும்  எனக்கு ஏவல் வைத்து விட்டார்கள் எனக்கு ஏவலால் பாதிப்பு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். இந்த ஏவல் என்பது என்னவென்று மட்டும் இதுவரை யாரும் விளக்கம் சொல்லுவதில்லை. இதெல்லாம் உண்மையில்லை அறிவியல் ஆதாரமில்லை என்று தனக்கு தெரிந்த குறைந்த அறிவை வைத்துக்கொண்டு விளக்கம் சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
உண்மையில் ஏவல் என்று ஒன்று இருக்கிறது என்று சொல்பவர்களும் இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறது என்பதற்கும் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை இல்லை என்று சொல்வதற்கும் எந்த வித ஆதாரங்களையும் தருவதில்லை.

நடுவில் எதையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத.... எதற்கும் காரணத்தையே தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்  நம்புகின்ற மங்குணி கூட்டம் ஒன்று பல கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டும் பயந்துக்கொண்டும் இருக்கிறது..

ஏவல் என்பது ஏவுதல் என்ற சொல்லில் இருந்து வந்தது ஏவுதல் என்றால் செலுத்துவது அல்லது உத்திரவிடுவது என்று அர்த்தம். இதை ஏதோ ஒரு சக்தியை ஒருவரின் மீதோ அல்லது ஒருவரை நோக்கியோ செலுத்துவதை ஏவல் என்று சொல்கின்றனர். ஏவப்படும் சக்தி என்ன என்றோ எது என்றோ கேட்டால் அவரவர் இஷ்டத்திற்கு பதில் சொல்வார்கள்.

ஏவல் என்பது ஒருவரின் மனதை கட்டுபடுத்தும் வித்தைதான். ஏவல் விடுவது என்பது மணி மந்திர ஓஷதம் என்று சொல்லப்படும் மூன்று அம்சங்களால் ஒருவரின் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தி அவரின் செயல்களை முடக்குவது அல்லது அவரின் செயல்களை கட்டுப்படுத்துவது. 

பொதுவாக மருந்துக்களை பயன்படுத்தி ஒருவரின் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவது செய்வினை என்றும் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்துவது ஏவல் என்றும் சொல்லப்படுகிறது.
ஏவலால் ஏற்படும் பாதிப்புகளில் மிக முக்கியமானவை மருட்சி அல்லது மன பிறழ்வு  எனப்படுவது. இது நவீன உளவியலில் ஹலூசினேஷன் என்று சொல்லப்படுகிறது. இதில்  உருவிழி தோற்றம் அல்லது மாய தோற்றம் மற்றும் மாய குரல்கள் என்று இரண்டு வகைபடும்.
மாய தோற்றம் என்பது விஷுவல் ஹலூசினேஷன் என்றும் மாய குரல்கள் என்பது ஆடிட்டரி ஹலூசினேஷன் என்றும் சொல்லப்படுகிறது.

விளக்கமாக சொல்வதென்றால். ஏவலால் பாதிக்கப்பட்டவர் தனியாக யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் கூட யாரோ இருப்பது போல தோன்றும். பக்கத்தில் யாரோ ஒருவர் படுத்திருப்பது  போலவோ அல்லது அமர்ந்திருப்பது போலவோ தோன்றும் அல்லது ஏதோ ஒரு உருவம் இப்படியும் அப்படியும் போவது போல தோன்றும் ஒரு சிலருக்கு யாரோ மேலே படுத்திருப்பது போல தோன்றும். இது விஷுவல் ஹலூசினேஷன் என்பது. சிலர் அடிக்கடி கருப்பாக ஒரு உருவம் குறுக்கே போனது என்று சொல்வார்கள். இதெல்லாம் மனபிறழ்வால் ஏற்படும் உருவிழி தோற்றங்கள். இன்னொரு வகை அமைதியாக இருக்கும் போது அல்லது யாரும் இல்லத போது யரோ காதருகில் பேசுவது போல கேட்க்கும். அடிக்கடி அவருக்கு மட்டும் ஒரு குரல் பேசுவது கேட்டுக்கொண்டே இருக்கும். இது ஆடிட்டரி ஹலூசினேஷன் எனப்படும். பல கொலைகள் தற்கொலைகள் இதனால் நடந்ததாக சர்வதேச அளவில் தரவுகள் உள்ளன. இவை இரண்டு பாதிப்புகளுக்கும் ஒரே காரணம் தான். 

சில இடங்களில் ஏவல் வைக்கப்பட்டதால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தவறான கீழ்தரமான சிந்தனைகள் தோன்றுவதுண்டு. தாய் அல்லது சகோதரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது போன்ற எண்னம். தந்தை தாய் அல்லது நெருங்கிய உறவினர்களை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் போன்ற சிந்தனைகள் ஏற்படும். இதுவும் மன பிறழ்வினால் ஏற்படுவதே. 

அறிவியல் அல்லது நவீன உளவியலாளர்களிடம் கேட்டால் இதற்கெல்லாம் மூளையில் செயல் பாடுகள் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த மூளையில் செயல் பாடு மாறியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் உடல் திரவங்கள் எனப்படும் மூளை ரசாயணங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் காரணம் என்று சொல்வார்கள் அந்த மூளை ரசாயங்கள் ஏன் மாறியது என்று கேட்டால் அது சொல்ல முடியாது என்று சொல்வார்கள்....அந்த சொல்ல முடியாது என்பதற்கான பதில் தான் ஏவல் என்பது.

இதையே யாரவது குறி சொல்பவர் அல்லது சாமியாரிடம் போய் கேட்டால் இது தீய சக்தியால் ஏற்படுவது என்பாவர் எந்த தீய சக்தி என்று கேட்டால் சொல்ல தெரியாது. இதில் இன்னொரு சமூக அரசியல் இருக்கிறது பல இடங்களில் சுடலை மாடன்...சுடுகாட்டு மாடன்...முனீஸ்வரர்...போன்ற கிராம தேவதைகளை பல இனக்குழுக்களுக்கு குல தெய்வமாக இருப்பவர்களை ஏவலுக்கு பயன் படுத்தி இருப்பதாக கதை விடுவார்கள்....ஒரு சிலர் காற்றில் ஏவல் ஏவப்பட்டிருக்கிறது என்றும் மாய சக்தியால் ஏவல் அனுப்பப்படிருக்கிறது என்றும் சொல்வர்கள்....

இது இரண்டுமே உணமையை தெரியாமல் உளருவது.  

ஏவல் பதிப்பை இரண்டு வழிகளில் மட்டுமே ஏற்படுத்த முடியும்.  ஒன்று மூளையில் செயல் இயக்கங்களை பாதிக்கும் மருந்துக்களை உட்கொள்ள செய்வது இரண்டு பேச்சின் மூலமாக மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது. நடைமுறையில்  ஏவலுக்கு என்று பயன் படுத்தப்படும் மூலிகைகளால் தயாரிக்கப்படும் மருந்துக்களை  பயன்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்துவதே அதிகம் நடைமுறையில் உள்ளது.

ஏவல் பாதிப்பை உருவாக்க பயன் படுத்தப்படும் மருந்துக்கள் மூன்று வழிகளில் கையாளப்படுகின்றன ஒன்று உணவில் கலந்து கொடுக்கப்படுவது. அடுத்தது புகை மூலமாக உடலுக்குள் செலுத்துவது மற்றது உடலில் பூசப்படுவதன் மூலமாக உடலுக்குள் செலுத்துவது. இவை ஒன்றும் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை அல்ல. 

உணவில் கலந்து கொடுக்கப்படும் ஏவல் மருந்துக்கள் உடல் திரவங்கள் எனப்படும் மூளை ரசாயங்களை மிக எளிதில் பாதிக்க கூடியவை. இதனால் அதிக கோபம்.. தற்கொலை எண்ணம்... எல்லருடனும் எப்போதும் சண்டை போடுவது....எப்போதும் பதட்டத்துடன் இருப்பது....போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மிக அதிகமாக பாதிக்கப்படுவது சிலவகை மூலிகைகளால் ஏற்படுத்தப்படும் புகைகளால் தான். குறிப்பிட்ட சில (பாதுகாப்பு கருதி பெயர்கள் சொல்லப்பட்வில்லை) மூலிகைகளால்  ஏற்படுத்தப்படும் புகைகள் மனித மூளையின் செயல் திறன்களை பாதிக்கும். குறிப்பாக காக்நெடிவ் டிக்ளைன் (Cognitive decline)  டிமென்ஷியா (Dementia) போன்ற மூளை சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது.
அதேபோல...சில வகை மருந்துக்களில் இருக்கும் வாசனை மூளையிம் ஆல்பாக்ட்ரி கார்டக்ஸ் என்ற பகுதியை பாதித்து அதன் மூலம் பதட்டம் மன இறுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனால்தான் பல இடங்களில் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைக்கு செல்லாமல் எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர்.  

பெரும்பாலும் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்வினை எனப்படும் இடுமருந்து பாதிப்பாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சில இடங்களில் உடல் பாதிப்பு எதுவும் இல்லாமல் பழக்கவழக்கங்களிலும் குணாதிசயங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். செய்வினை பாதிப்பு இருப்பவர்களுக்கு உடல் பாதிப்பு இருக்கும் ஆனால் ஏவல் பாதிப்பு இருப்பவர்களுக்கு அவர்களில் வேலைகளை செய்யாமல் இருப்பது...அதீத பயம்...அதிக கோபம்...எதிலும் நாட்டமில்லாமல் இருப்பது....எப்போதும் பதட்டமாக இருப்பது....தேவையற்ற கற்பனை....போன்ற குணங்கள் இருக்கும். அதிலும் நார்மலாக இருந்த ஒருவர் திடீரென இத்தகைய மாற்றங்களை சந்தித்தால் அதற்கும் ஏவல் எனப்படும் செயற்கை தூண்டல் காரணமாக இருக்கும். 

கருஊமத்தை...கச்சிகொள்ளு...ஜண்டப்ரகி...சிவாகை போன்ற மூலிகைகளில் இருக்கும் நச்சுத்தன்மை மனித மூளையை பாதிக்கும் தன்மை கொண்டவை. ஏவல் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு உண்மையிலேயே அத்தகைய பாதிப்பு இருக்கிறதா என்று அறிந்து கொள்ள முதலில் நாடி சோதனை செய்து பார்க்க வேண்டும். மிக முக்கியமாக தலையின் பின் பகுதியில் இருக்கும் வர்ம புள்ளிகளின் தன்மை ஏவல் பிரச்சனையை சரியாக அடையாளம் காண உதவும் மான்யமூலா எனப்படும் வர்ம முடிச்சு மற்றும் தலையின் நடுபகுதியில் இருக்கும் சிவராந்த்ரா மைய முடிச்சு மனதில் தோன்றும் எண்ணங்களின் கோர்வையை கண்டுபிடிக்க உதவும்..

 பெயர் தான் ஏவல் என்று சொல்லப்படுகிறதே தவிர இது நடைமுறையில் இருக்கும் அறிவியல் முயற்சிகள் தான்.    
ஏவல் இருப்பதாக சொல்பவர்கள் முதலில் அந்த ஏவல் மருந்துக்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டதா அல்லது மன பயத்தை ஏற்படுத்தும் மூளைசலவையால் (கவுன்சிலிங்) ஏற்படுத்தப்பட்டதா என்று கண்டறிய வேண்டும். இரண்டு முறையில் எதால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் மூளை நரம்பு மண்டலத்தை பலபடுத்தவும் உடல் திரவங்களின் சரி விகித்தத்தை சமன் படுத்தவும் மருந்துக்களை உட் கொண்டால் ஏவலால் ஏற்படும் மன பாதிப்புகள் ம முழுமையா நீங்கிவிடும். ஆனால்......
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு அதற்கு தகுந்தாற் போல் தான் சிகிச்சைக்கான காலமும் நாட்களும்மாறு படும் குறிப்பிட்டு இத்தனை நாட்களுக்குல் குணமாகும் என்று சொல்ல இயலாது. தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் போது நிச்சயமாக முழுமையான குணம் பெற இயலும். 
        
              


Comments