ஏவல் என்றால் என்ன...

ஏவல் என்றால் என்ன........ பல இடங்களில் பலரும் எனக்கு ஏவல் வைத்து விட்டார்கள் எனக்கு ஏவலால் பாதிப்பு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். இந்த ஏவல் என்பது என்னவென்று மட்டும் இதுவரை யாரும் விளக்கம் சொல்லுவதில்லை. இதெல்லாம் உண்மையில்லை அறிவியல் ஆதாரமில்லை என்று தனக்கு தெரிந்த குறைந்த அறிவை வைத்துக்கொண்டு விளக்கம் சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். உண்மையில் ஏவல் என்று ஒன்று இருக்கிறது என்று சொல்பவர்களும் இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறது என்பதற்கும் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை இல்லை என்று சொல்வதற்கும் எந்த வித ஆதாரங்களையும் தருவதில்லை. நடுவில் எதையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத.... எதற்கும் காரணத்தையே தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் நம்புகின்ற மங்குணி கூட்டம் ஒன்று பல கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டும் பயந்துக்கொண்டும் இருக்கிறது.. ஏவல் என்பது ஏவுதல் என்ற சொல்லில் இருந்து வந்தது ஏவுதல் என்றால் செலுத்துவது அல்லது உத்திரவிடுவது என்று அர்த்தம். இதை ஏதோ ஒரு சக்தியை ஒருவரின் மீதோ அல்லது ஒருவரை நோக்கியோ செலுத்துவதை ஏவல் என்று சொல்கின்றனர். ஏவப்படும் சக்தி என்ன என்றோ எது என்...